38-வது சப் ஜூனியர் (Sub Junior) தேசிய வளையப்பந்து போட்டி: வரலாற்றுச் சாதனை படைத்த தமிழ்நாடு அணி!
பஞ்சாப் மாநில வளையப்பந்து கழகம் மற்றும் இந்திய வளையப்பந்து கூட்டமைப்பு இணைந்து நடத்திய `38 வது சப் ஜூனியர் தேசிய வளையப்பந்து போட்டிகள் - 2026' பஞ்சாப் மாநிலம், பகுவாராவில் உள்ள டிவைன் பப்ளிக் ஸ்கூல் விளையாட்டு மைதானத்தில் 17/10/2026 (சனிக்கிழமை) முதல் 21/10/2026 (புதன்கிழமை) வரை தொடர்ச்சியாக 5 நாள்க

பஞ்சாப் மாநில வளையப்பந்து கழகம் மற்றும் இந்திய வளையப்பந்து கூட்டமைப்பு இணைந்து நடத்திய `38 வது சப் ஜூனியர் தேசிய வளையப்பந்து போட்டிகள் - 2026' பஞ்சாப் மாநிலம், பகுவாராவில் உள்ள டிவைன் பப்ளிக் ஸ்கூல் விளையாட்டு மைதானத்தில் 17/10/2026 (சனிக்கிழமை) முதல் 21/10/2026 (புதன்கிழமை) வரை தொடர்ச்சியாக 5 நாள்கள் நடைபெற்றன.இப்போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 19-க்கும் மேற்பட்ட அணிகளாக கலந்து கொண்டனர்.இப்போட்டிகள் குழு போட்டியாகவும், தனிநபர் ஒற்றையர், தனிநபர் இரட்டையர் மற்றும் தனிநபர் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் நடைபெற்றன.இப்போட்டியில் தமிழ்நாடு மாணவர்கள் அணியின் சார்பாக திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த M.ஜோயல், M.ஜோஷுவா, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த S.மௌலிஷ், G.மைக்கேல் ஜெபஸ்டின், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த M.விஷவஜித், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த S.திலீப் ஆகியோரும்... மாணவிகள் பிரிவில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த V.A.காருண்யா ஸ்ரீ, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த A.அஸ்மிதா, R.கனிதா, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த S. சுரக்ஷனா, G.அனுஷ்கா, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த K.நவீனா ஆகியோரும் கலந்து கொண்டனர். நானயம் நடந்து முடிந்த 38-வது சப் ஜூனியர் தேசிய அளவிலான வளையப்பந்து போட்டியில் தமிழக மாணவிகள் அணி, குழு போட்டியில் கேரளா அணியை எதிர்த்து விளையாடி 3 - 0 என்ற புள்ளிக் கணக்கின் அடிப்படையில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றது. அதேபோல் தமிழக மாணவர்கள் அணி புதுச்சேரி அணியை எதிர்த்து விளையாடி 3-2 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெள்ளிப் பதக்கத்தை வென்றது.தனிநபர் போட்டிகளில் மாணவர்களுக்கான ஒற்றையர் போட்டியில் தமிழ்நாடு அணியைச் சேர்ந்த M.ஜோயல் தங்கப் பதக்கத்தையும், மாணவிகளுக்கான தனிநபர் ஒற்றையர் பிரிவில் தமிழக அணியைச் சேர்ந்த A.அஸ்மிதா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்கள். மாணவர்களுக்கான தனிநபர் இரட்டையர் பிரிவில் தமிழக அணியைச் சேர்ந்த G.மைக்கேல் ஜெபஸ்டின் மற்றும் S.மௌலிஷ் ஆகியோர் ஆந்திர அணியை எதிர்த்து விளையாடி 0-2 என்ற புள்ளி அடிப்படையில் வெள்ளிப் பதக்கம் வென்றனர். மாணவிகளுக்கான தனிநபர் இரட்டையர் போட்டியில் R. கனிதா மற்றும் G.அனுசியா ஆகியோர் ஆந்திரா அணியை எதிர்த்து விளையாடி 2-1 என்ற புள்ளியில் அடிப்படையில் தங்கப் பதக்கத்தை வென்றனர்.தனிநபர் கலப்பு இரட்டையர் பிரிவில் M.விஸ்வஜித் மற்றும் K.நவீனா ஆகியோர் கோவா அணியை எதிர்த்து விளையாடி 2-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் தங்கப் பதக்கத்தை வென்றனர்.நடந்து முடிந்த 38 வது சப் ஜூனியருக்கான வளையப்பந்து போட்டியில் தமிழக வளையப்பந்து அணி 25 புள்ளிகளுக்கு 18 புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து 9 வருடங்களுக்கு மேலாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இப்போட்டியை வழிநடத்திய தமிழக வளையப்பந்து கழகத்தினுடைய சேர்மேன் M.V.M வேல்முருகன், தலைவர் சௌபாக்கியா V.வரதராஜன், செயலாளர் D.சங்கர் மற்றும் பொருளாளர் K.ஆனந்த கிருஷ்ணன் மற்றும் அணி தலைமை பயிற்சியாளரான B.முரளி மற்றும் இப்போட்டியின் பயிற்சியாளர்கள் M.அபினேஷ், D.உமா மகேஸ்வரி ஆகியோர் மற்றும் அணி மேலாளர்களான G.சாரங்கபாணி மற்றும் P.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் அணி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.38 வது தேசிய அளவிலான சப் ஜூனியர் வளையப்பந்து போட்டியில் பங்கு பெற்று பதக்கங்களை வென்று குவித்த தமிழக மாணவ மாணவிகள் அணியைச் சேர்ந்த அனைவருக்கும் தமிழ்நாடு வளையப்பந்து கழகத்தினுடைய சேர்மன் M.V.M வேல்முருகன், தலைவர் சௌபாக்கியா V.வரதராஜன், செயலாளர் D. சங்கர், பொருளாளர் K.அனந்த கிருஷ்ணன் மற்றும் துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள், நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் இந்திய வளையப்பந்து கூட்டமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்ட வளையப்பந்து கழகத்தினுடைய தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.