BB Tamil 10: கடவுள் பாதி, மிருகம் பாதி ஜேசன்; வாசன் செய்த சம்பவம்! - 6வது வார ஹைலைட்ஸ்!
இந்த வாரம் ‘வாசன்’ வாரம். ‘வாசமில்லா மலரிது’ என்று இவரைப் பற்றி கடந்த வாரத்தில் எழுதியிருந்தேன். ஆனால் வைர வேட்டையை திறமையாக நிகழ்த்தி பார்வையாளர்களின் உள்ளங்களை திருடி விட்டார். ‘உனக்கு கேம் புரியல..’ என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்த சக போட்டியாளர்களை வீடு முழுக்க வைரத்தை தேட விட்டு அலைய வைத்தத

இந்த வாரம் ‘வாசன்’ வாரம். ‘வாசமில்லா மலரிது’ என்று இவரைப் பற்றி கடந்த வாரத்தில் எழுதியிருந்தேன். ஆனால் வைர வேட்டையை திறமையாக நிகழ்த்தி பார்வையாளர்களின் உள்ளங்களை திருடி விட்டார். ‘உனக்கு கேம் புரியல..’ என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்த சக போட்டியாளர்களை வீடு முழுக்க வைரத்தை தேட விட்டு அலைய வைத்தது சுவாரசியமான டிவிஸ்ட். ‘ஒண்ணுமே தெரியாதவனும் கிடையாது, எல்லாம் தெரிஞ்சவனும் கிடையாது’ என்கிற பழமொழி மீண்டுமொருமுறை நிரூபணமாகிறது. வாசனின் இந்த வெற்றி ‘ஒன் டைம் வொண்டரா?’ அல்லது மேலும் தொடருமா?ஒரேயொரு டாஸ்க்கில் வென்றவருக்கு ‘எவிக்ஷன் ஃப்ரீ பாஸ்’ உடனே தரப்படுகிறது என்றால் மற்றவர்களின் இத்தனை வார உழைப்பிற்கு மதிப்பென்ன?!ஆறாவது வாரத்தில் என்ன நடந்தது?கடந்த வாரத்தைப் போலவே இந்த வாரத்தின் ஹைலைட்டும் வீக்லி டாஸ்க்தான். Diamond Heist Task மற்றும் டான்ஸ் மாரத்தான் 10.O ஆகிய இரண்டையும் ஒன்றாக நிகழ்த்தினால் சுவாரசியம் கூடும் என்று பிக் பாஸ் நினைத்திருப்பார். ஆனால் போட்டியாளர்கள் இரண்டையுமே சரியாக நிகழ்த்தாமல் சொதப்பினார்கள். Bigg Boss 10 - 6th Week Highlights‘வைரத்தை திருடும் போது பிடிபட்டால் கடுமையான தண்டனை இருக்கும்’ என்கிற விதி பலரையும் அச்சப்பட வைத்து விட்டது. எனவே ‘சாருக்கு தண்ணி கொடு’ என்கிற ஹோட்டல் காமெடி போல மற்றவர்கள் யாராவது திருடட்டும், சந்தர்ப்பம் கிடைத்தால் அதில் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று தள்ளி நின்று காத்திருந்தார்கள். ‘யாராவது வைரத்தை எடுத்து கேமை சுவாரசியம் ஆக்குங்கப்பா’ என்று வெளிப்படையாகவே கூவி அனத்தினார் ஷாதிகா.வீட்டில் ஆங்காங்கே கூடி ரகசியம் பேசி கூட்டணி அமைத்துக் கொண்டாலும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையில்லாமல் ஆடினார்கள். போதாதற்கு Trust No One என்கிற லேபிளை வேறு பிக் பாஸ் ஒட்டி விட்டார். திருடுவதற்கான கூட்டணி என்றாலும் அதில் பரஸ்பர நம்பிக்கையும் விசுவாசமும் இருந்தால்தான் அந்த சம்பவம் உருப்படும். மாறாக கூட்டாளி எந்த நேரமும் கழன்று விடுவான் என்கிற நிலைமை இருந்தால் எப்படி அந்தத் திருட்டு உருப்படும்? இதுவேதான் இந்த டாஸ்க்கில் நிகழ்ந்தது.‘செய்யறது திருட்டு, இதுல என்ன நேர்மை?’ என்று விசே கிண்டலடித்தது சரியான அணுகுமுறை அல்ல. வார இறுதியில் குறும்படம் முடிந்த பிறகு, வைரத்தை எடுக்கச் சென்ற வாசன், மீண்டும் ஸ்கூரூவை சரியாக பொருத்தும் போது ‘தொழிலை சுத்தமா செய்யறாரு’ என்று சொன்னவரும் இதே விசேதான். திருட்டாக இருந்தாலும் அதிலொரு நேர்மை வேண்டும்.வாசனின் வெற்றிக்கு காரணமாக இருந்த முனியம்மாள்தண்டனைக்குப் பயந்து ஏறத்தாழ எல்லோருமே வைரத்தை எடு்க்க தயங்கிய போது முதலில் இதை உடைத்தவர் முனியம்மாள்தான். “ஆட்டத்துல எனக்கு வெற்றி, தோல்வி முக்கியமில்ல. ஆடற சந்தோஷம்தான் முக்கியம்’ என்று ஏற்கெனவே சொன்னவர். “போங்கப்பு.. யாரும் எடுக்க மாட்றீங்க.. நானே எடுக்கறேன்’ என்று விளையாட்டாக எடுத்ததை கரிஷ்மா பார்த்து அனைவரிடமும் சொன்ன கணத்தில் வீட்டாரின் கவனம் முழுக்க அங்கு குவிந்தது. இந்தச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி ஒரிஜினல் வைரத்தை வாசன் திருடினார். Bigg Boss 10 - 6th Week Highlightsஆக, வாசனின் வெற்றிக்கு அடிப்படையான காரணமாக இருந்தது முனியம்மாள்தான். அவர் இதை விளையாட்டாக செய்யாமல் ‘எதைச் செஞ்சாலும் பிளான் பண்ணிதான் பண்ணணும்’ என்கிற வடிவேலுவின் தத்துவத்தைப் பின்பற்றி சரியாக செய்திருந்தால் ஒருவேளை அவரே வெற்றியாளராக அமைந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். ஷமா, ஜேசனைத் தொடர்ந்து ‘காமன்மேன்’ வரிசையில் மூன்றாவது வெற்றியாளராக ‘எவிக்ஷன் ஃப்ரீ பாஸை’ வென்றிருப்பார், முனி.பிக் பாஸ் வீட்டில் ரசித்து வாழ்ந்து சரியாக கேம் ஆடும் முனியம்மாளிடம் சில பலவீனங்களும் இருக்கின்றன. ‘நீ லீடர் பதவிக்கு லாயக்கே இல்லை’ என்று மற்றவர்களை எளிதில் சொல்லி விடும் முனியம்மாவிடம் தலைமைப் பண்பு இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை. தான் லீடராக வந்தால் நோண்டி நுங்கெடுத்து விடுவார்கள் என்று அவருக்கே தெரிந்திருக்கிறது. இது மற்றவர்களுக்கும் தெரியும். கடந்த வாரத்தில் எதிரணித் தலைவராக வந்த முனியம்மா எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.Bigg Boss 10 - 6th Week Highlightsமுனியின் அலப்பறைகளை கண்டித்த விசேமட்டுமல்லாமல் வீட்டு வேலைகளைச் செய்வதற்கும் சுணங்குகிறார். ‘மாட்டேன் போ’ என்று அடம்பிடிக்கிறார். போலவே தண்டனைகளையும் எளிதில் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். இந்த வாரத்தில் தலைவராக இருந்த அன்சர், முனியம்மாளின் நண்பர் என்பதால் செல்லமாகவும் கோபமாகவும் எப்படி எப்படியோ சொல்லிப் பார்த்து விட்டார். என்றாலும் முனியம்மாளை பணிய வைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. கூட இருந்த வினோத்தும் முனியம்மாவின் அலப்பறைகளைப் பார்த்து ‘இப்படிப் பண்ணா அவன் லீடர் பதவியை எப்படி நடத்த முடியும்? என்று பரிதாபமாகக் கேட்கிறார். எப்படியோ சிறையில் அடைத்தாலும் “நான் இங்க கேம் ஆடத்தான் வந்தேன். அதை செஞ்சது தப்பா.. எனக்கு உடம்பு சரியில்ல. என்னை அடைச்சு வெச்சிருக்கீங்க?’ என்று சுயபச்சாதாபத்தில் கண்ணீர் விடுகிறார். “என்ன வேணா தண்டனையை அனுபவிச்சிட்டுப் போறேன். என்ன இப்ப?” என்று ஆரம்பத்தில் கெத்தாக சொல்லும் முனியம்மாள், பிறகு கண்ணீர் விட்டு அனுதாபம் தேடுவது பலவீனம்.இந்த வாரத்தின் தலைவர் பதவிக்கான போட்டியில் முனியம்மாளும் இருந்தார். அவருக்கு செக்மேட் வைப்பதற்காக எல்லோரும் சேர்ந்து அவரைத் தலைவராக்கியிருந்தால் ஆட்டம் சுவாரசியமாகியிருக்கும். முனியம்மாவின் இந்த பலவீனங்களை வார இறுதியில் விசே ஊமைக்குத்தாக குத்தியது சிறப்பு. ‘நீங்க என்ன வீட்டுக்கு செல்லப்பிள்ளையா, நீங்க சந்தோஷமா இருக்க வந்தீங்கன்னா.. மத்தவங்க அழறதுக்கு வந்தாங்களா?’ என்கிற கேள்விகளை கேட்டிருக்கிறார். முனியிடம் இருக்கும் சனி போகிறதா என்று பார்ப்போம்.Bigg Boss 10 - 6th Week Highlights‘உங்க கிட்ட அவன் மாட்டலை. அவன் கிட்டதான் நீங்க மாட்டியிருக்கீங்க’ - வாசன் செய்த சிறப்பு சம்பவம்‘உனக்கு கேம் புரியல. சொல்றதையும் புரிஞ்சுக்க முடியல’ என்பதுதான் வாசனின் மீதான தொடர் குற்றச்சாட்டாக இருந்தது. இதைப் போலவே ‘முதல் நாள் ஃபயரா இருந்தாங்க. அதுக்கு அப்புறம் ஆளையே காணலை’ என்று குற்றம் சாட்டப்பட்டவர் கரிஷ்மா. இந்த இருவரும்தான் வைரம் டாஸ்க்கில் மிக மிக ஆக்டிவ்வாக இருந்தார்கள். எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்கிற வெறி இருந்தது. நம்மை ஒருவர் எமோஷனலாக பின்னுக்குத் தள்ளும் போது சோர்ந்து விடாமல் அதையே இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு வேகமாக உழைக்க வேண்டும் என்பதற்கான உதாரணம் இது. விசாரணை சமயத்தில் வாசனின் வாக்குவாதம் செய்யும் திறமை கூர்மையாக வெளிப்பட்டது. “எனக்கு லாயர் வேணும் பி்க் பாஸ்” என்று ஆரம்பத்திலேயே அதிரடி செய்தார் வாசன். (முன்அனுபவம் காரணமாக இருக்குமோ?!). “பிக் பாஸ் பதில் சொல்லலைன்னா ஆமாம்ன்னு அர்த்தம்’” என்று ஜேசன் மடக்க முயல ‘“அப்படியா.. அப்ப ஜேசன் திருடன்தானே?” என்று வாசன் பதிலுக்கு மடக்கியது நன்று. (வாசன் vs ஜேசன்). தன்னிடம் போடப்பட்ட டீலிங் பற்றி, விசாரணையாளர்களுள் ஒருவரான அவினாஷ் கேள்வி கேட்க “அப்ப நீயும் அக்யூஸ்ட்டுதானே? இந்தப் பக்கம் வந்து உக்காரு” என்று நோஸ் கட் செய்தார் வாசன். “நீங்க புரியற மாதிரி பேசினாலே எனக்குப் புரியாது. புரியாத மாதிரி பேசினா எப்படி புரியும்?’ என்று விசாரணை செய்தவர்களையே தலைசுற்ற வைத்தார் வாசன்.பொருளை திருடுவதற்கு முன்பே அதைப் பதுக்குவதற்காக, யாருக்கும் சந்தேகம் வராத இடத்தை தேர்வு செய்தது, திருடிய பிறகு மின்னல் வேகத்தில் சென்று பதுக்கியது, அவ்வப்போது உறுதி செய்தது போன்றவை வாசனின் திறமையான திருட்டிற்குச் சான்று. ஆனால் படபடப்பாக இருந்தது, பாத்ரூம் பக்கமே சுற்றியது போன்றவற்றைத் தவிர்த்திருக்கலாம்.Bigg Boss 10 - 6th Week Highlightsவாசன் மீது பொறாமையை வெளிப்படுத்தினாரா, ஜேசன்?வாசனின் திறமையோடு அதிர்ஷ்டமும் அவர் பக்கத்தில் இருந்தது எனலாம். அவர் வைரத்தை ஒளித்து வைக்கும் போது அஷ்மிதா சில நொடிகள் முன்னால் வந்திருந்தால் கண்டுபிடித்திருப்பார். வாசனின் heist திறமையை பிக் பாஸ் டீம் பயங்கர பில்டப்புடன் குறும்படமெல்லாம் போட்டு காட்டியதைக் கண்டு அனைவருமே மனதிற்குள் நொந்து போயிருப்பார்கள். இந்தப் பொறாமையை வெளிப்படையாகவே காட்டினார் ஜேசன். வாசன் வந்த போது எழுந்து கொள்ளாமல் இருந்ததை விசேவும் சுட்டிக் காட்டினார். பொதுவாக ஒருவரின் வெற்றியின் மீதான பொறாமையை ஒளித்து வைத்துக் கொள்வதுதான் வழக்கம். ஆனால் ஜேசன் இதை வெளிப்படையாகவே காட்டி விடுகிறார். ஷமாவிற்கு எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் கிடைத்த போது ஜேசன் காட்டிய அதிருப்தி எக்ஸ்பிரஷன்களை விசே கிண்டலடித்தார். தன் உணர்ச்சிகளை ஒளித்து வைத்துக் கொள்ளாமல் நேர்மையாக வெளிப்படுத்தி விடும் ஜேசனை பாராட்டலாம். ஆனாலும் சக போட்டியாளரின் வெற்றியை இணைந்து கொண்டாடுவதுதான் உண்மையான ஸ்போர்ட்ஸ்மென்ஷிப். வாசனின் சம்பவத்தோடு ஒப்பிடும் போது கரிஷ்மாவின் திருட்டு படு அமெச்சூரானது. அது ஃபேக் வைரமாக இருந்தாலும் நடன மேடைக்கு கீழேயே விட்டு வைத்திருக்கலாம். அநாவசியமாக தூக்கி democracy room-க்குள் போட்டார். அவருக்கான பாராட்டு எல்லாம் ஓவர்.ஒரே வாரத்தில் எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் கிடைத்தாலும் ‘இதை விட பெரிசாக கொடுப்பாங்கன்னு எதிர்பார்த்தேன்’ என்று வாசன் இறுதியில் சொன்னதுதான் நகைச்சுவை ஹைலைட். அதே சைஸில் உண்மையான வைரத்தை பரிசாக தருவார்கள் என்று எதிர்பார்த்தாரா?வைரத்தை எடுப்பதில் பலரும் சுணக்கம் காட்டினாலும் ஒளித்து வைக்கப்பட்ட பிறகு அதை கண்டுபிடிப்பதில் மட்டும் பயங்கர ஆர்வம் காட்டினார்கள். வீட்டையே தலைகீழாக புரட்டிப் போட்டார்கள். ஓவர் டைம் பார்த்து தேடுதல் வேட்டையை செய்தார் அஷ்மிதா. ஆனால் பிருத்வியின் நிலைமைதான் பாவம். Bigg Boss 10 - 6th Week Highlightsசற்று பக்கத்தில் தேடியிருநதால் வைரம் கிடைத்திருக்கும். ‘எழுபத்தொன்பது அடி வரை தோண்டி சலித்துப் போய் கைவிட்டவனுக்கு எண்பதாவது அடியில் தங்கம் இருந்த கதை தெரியாமல் போய் விட்ட துரதிர்ஷ்டம் மாதிரி இருக்கிறது.கடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து வைத்த கலவை - ஜேசன்ஒவ்வொரு வாரமும் ஜேசனின் கேரக்டரை கவனிப்பது சுவாரசியமாக இருக்கிறது. ‘கடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து செய்த கலவை’ போல இருக்கிறார். எப்போதும் கெத்தாக சுற்றும் ஜேசன் உடைந்து போனதை இந்த வாரத்தில் பார்க்க முடிந்தது. தன்னுடைய துணிகளை தூக்கி வீசிய அவினாஷ் உடனான மோதலில் ‘வளர்ப்பு’ பற்றி பேசி மாட்டிக் கொண்டார் ஜேசன். ஒவ்வொரு சீசனிலும் இந்தப் பிரச்சினை வந்து விடுகிறது. எந்தவொரு பெற்றோரும் தங்களின் பிள்ளைகளை சிறப்பாக வளர்க்கவே நினைப்பார்கள். ஒருவரின் ஒழுங்கீனத்தை சுட்டிக் காட்ட ‘நல்லா வளர்த்தாங்க பாரு.. உங்க அம்மா அப்பா’ என்று குற்றம் சாட்டுவது மோசமான அணுகுமுறை. ‘இதுவே வீட்டுக்கு வெளில நடந்திருந்தா, நீ வேற ஜேசனை பார்த்திருப்பே’ என்றும் உறுமினார். எனில் காமிரா கண்காணிப்பிற்கு அஞ்சிதான் தன் மிருகத்தனத்தை ஒளித்து வைத்திருக்கிறாரா? ‘கண்காணிக்கப்படாத போதும் நேர்மையாக நடந்து கொள்வதற்குப் பெயர்தான் ஒழுக்கம்’ என்பது பலகைகளில் மட்டும்தான் இருக்கும் போல.இந்த சீசனின் சிங்கமாக உலவுகிற ஜேசன் (அதான் அவார்டு தந்துட்டாங்களே.. தலைமுடி கூட பிடறி மாதிரிதான் இருக்குது). சாந்தினி முன்னால் மட்டும் சுண்டெலியாக மாறி விடுகிறார். என்னதான் வழிந்தாலும், அதே சமயத்தில் சாந்தினி தன்னைப் பயன்படுத்திக் கொள்கிறார் என்கிற ஜாக்கிரதையுணர்ச்சியும் இருக்கிறது. வைரம் டாஸ்க்கின் போது ‘எனக்கு உங்க மேலயும் டவுட் இருக்கு’ என்கிறார்.Bigg Boss 10 - 6th Week Highlightsஅவினாஷ் உடன் போட்ட சண்டையிடும் போது ஆக்ரோஷமாக தென்பட்டாலும் பிறகு தன் தவறு குறித்த குற்றவுணர்வு ஜேசனுக்கு வந்தது போல. “எனக்கும் தண்டனை கொடுங்க. ரெட்டிப்பா குடுங்க” என்று லீடரின் முன்னால் வந்து நின்றார். ஜேசனின் பலவீனம் அவரால் தினசரி குளிக்க முடியாமல் இருக்க முடியாது போல. இதை அறிந்து கொண்ட அன்சர் ‘நீங்க இன்னிக்கு குளிக்கக்கூடாது”என்று விசித்திரமான தண்டனையை தர மேலும் உடைந்து போன ஜேசனின் எக்ஸ்பிரஷன்களை பிக் பாஸ் டீம் க்ளோசப்களில் அள்ளியது. ஆனால் இயற்கையே ஜேசனுக்கு உதவி செய்ய வந்தது. பிறகு பெய்த மழையில் சட்டையைக் கழற்றி நின்ற ஜேசன் ‘நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்’ என்கிற மாதிரி கெத்து காட்டினார்.டாஸ்க்கோடு சேர்த்து நாமினேஷனையும் சொதப்பிய போட்டியாளர்கள்கடந்த வாரத்தில் ‘சும்மா லுலுவாய்க்கு’ Open Nomination நடத்திய பிக் பாஸ், இந்த வாரத்தில் உண்மையிலேயே அதை நிகழ்த்தினார். இந்த வாய்ப்பை போட்டியாளர்கள் சரியாக பயன்படுத்தியிருக்கலாம். கரிஷ்மா மற்றும் வாசன் மீதுதான் அதிக வாக்குகளை கொலைவெறியுடன் குத்தினார்கள். ‘எல்லோரையுமே நாமினேஷன்ல வர வெச்சிருக்கலாமே?’ என்று அப்போதே கரிஷ்மா முனகியதை வார இறுதியில் விசேவும் பலமாக கண்டித்தார். “வைல்டு கார்டுல வந்தவங்க தேவையில்ல. எங்களை மட்டுமே வெச்சு ஆட்டத்தை நடத்தலாம்’ என்று முனியம்மாள் வெளிப்படையாக சொன்னதுதான் பலரின் எண்ணமாக இருக்கிறது போல.வைரத் திருட்டில் கவனம் குவிந்ததால் தாங்கள் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்களை பலரும் சின்சியராக ஃபாலோ செய்யவில்லை. வழக்கம் போல் அசத்தியவர் வினோத் மட்டுமே. கடல் ராசா, ஜேக் ஸ்பாரோவாக அவர் பின்பற்றிய உடல்மொழியை வாரம் பூராவும் செய்து பார்வையாளர்களை மகிழ்வித்தார். பச்சைக்கிளியாக அன்சரின் நகைச்சுவையையும் சொல்லலாம். Bigg Boss 10 - 6th Week Highlightsஇந்த இருவரும்தான் ஷோவை சுவாரசியமாக கொண்டு செல்கிறார்கள். ஒரு லீடருக்கு இருக்க வேண்டிய பொறுமையுடன் பல பிரச்சினைகளை இந்த வாரம் திறமையாக சமாளித்தார் அன்சர். இந்த இருவரையும் வார இறுதியில் விசே பாராட்டியது சிறப்பு. “வினோத்.. வேற ஒரு காரெக்டர் கொடுத்தா, நீங்க சிறப்பா பண்றீங்க.. இந்த சீசன் முழுக்க அப்படியொரு காரெக்ட்டரை உருவாக்குங்க” என்று விசே சொன்னது ஷார்ப் அப்சர்வேஷன்.டான்ஸ் மாரத்தானில் முனியம்மாளுக்குப் பொருத்தமான பாடலை ஒலிக்க விட்டு அசத்தினார் பிக் பாஸ். (என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி!). டான்ஸ் ஆடுவதை பெரும்பாலானவர்கள் பார்க்க வெளியே வராமல், உள்ளே வைரத்தின் பக்கத்திலேயே தேவுடு காத்ததால், வைரத்தை கார்டன் ஏரியாவிற்கு பிக் பாஸ் நகர்த்த வேண்டியிருந்தது.வைர டாஸ்க்கை சுவாரசியப்படுத்துவதற்காக பிக் பாஸ்தான் பல வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது. க்ளீனிங் டீம் என்ற ஒன்றை ஏற்படுத்தி கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தினார். விசாரணை என்கிற பெயரில் அனைவரையும் ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு வரச் செய்து சந்தேகப் பட்டியலில் இருந்தவர்களுக்கு உதவினார்.Bigg Boss 10 - 6th Week Highlightsதொண்டைப் பிரச்சினையால் விசேவின் அணுகுமுறையில் மாற்றம்?வீக்கெண்ட் ஷோக்களில் போட்டியாளர்களை அதட்டி உட்கார வைக்கும் விசேவின் அணுகுமுறை பற்றி பலமுறை பேசியிருக்கிறோம். ஆனால் விடிவி கணேஷ் டோனில் தொண்டைப் பிரச்சினையோடு வந்திருக்கும் சமீபத்திய விசேவிடம் கணிசமான மாற்றம் தென்படுகிறது. குறிப்பாக நேற்றைய ஞாயிறு எபிசோடில் சரியான பாயிண்ட்டுகளை அதிகம் வளர்த்தாமல் நறுக்கென்று பேசினார். கூடவே இயல்பான நகைச்சுவையையும் சேர்த்துக் கொண்டார். “இந்த வாரம் ஆளும் அணியை கலங்கடிக்கிறோம். கதற விடறோம். மக்களே. இதையெல்லாம் நாங்க அவங்களை புண்படுத்த செய்யலை. ஆட்டத்தை சுவாரசியமாக்கறதுதான் எங்க நோக்கம்” என்று எதிரணியில் இருந்த சிங்கப் பெண்கள் பிளான் செய்த போது நமக்குமே ஆர்வமாகத்தான் இருந்தது. ஆனால் வெறுமனே கூச்சலாக கத்துவது, இங்கிருக்கும் பொருளை அங்கிட்டு தூக்கி வந்து போடுவது என்று மொக்கையான விஷயங்களைத்தான் செய்தார்கள். ‘இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே?’ என்று கிண்டலடித்த விசே ‘பாராட்டை எதிர்பார்க்கறாங்கடோய்’ என்று சிரித்தது சிறப்பான காட்சி. தங்களின் சாதனைகளை ஷாதிகா விளக்கிய போது அவருக்கே சிரிப்பு வந்து விட்டது. “இதெல்லாம் சின்னப்புள்ளத்தனமா இருக்கு” என்று ஆட்சேபித்தவர் முனியம்மாள் மட்டும்தான்.வார இறுதியில் ஒரு கூடுதல் பஞ்சாயத்து. உணவுக்காக தட்டேந்தி நிற்பது அவமானமாக இருக்கிறது என்று அழுது ஊரைக் கூட்டினார் லட்சுமி பிரியா. இவர் கிச்சன் லீடராக இருந்த போது ‘இவங்களுக்கு வடிச்சுக் கொட்டியே என் உயிர் போகுது. தின்னுத் தொலைங்க’ என்றெல்லாம் அனத்தியவர். கர்மா ஈஸ் பூமராங்க்.Bigg Boss 10 - 6th Week Highlightsராகவ் - சாந்தினி எவிக்ஷன் - ஆட்டத்தில் மாற்றம் நிகழுமா?இந்த வாரம் எவிக்ட் ஆனவர்கள் ராகவ் மற்றும் சாந்தினி. உடல்நலப் பிரச்சினை காரணமாக ராகவ்வின் வெளியேற்றம் நிகழ்ந்தது. சாந்தினியெல்லாம் சென்ற நூற்றாண்டிலேயே எவிக்ட் ஆகியிருக்க வேண்டியவர். இதுவரை எப்படி தாக்குப் பிடித்தார் என்பது ஆச்சரியம். ராகவ்வின் கால் பிரச்சினை தீவிரமானது என்பதை அறிந்த முத்தழகி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டது உருக்கமான காட்சி. டாஸ்க்கின் போது ‘ராகவ் அடிபட்டது போல் நடிக்கிறார்’ என்று புகார் சொன்னது தவறு என்பதை உணர்ந்து விட்டார். டாஸ்க்கில் தரப்பட்ட பாத்திரங்களுக்காக தன்னை இயன்ற அளவில் வித்தியாசப்படுத்தி ஃபர்பாமன்ஸ் செய்தார் ராகவ். மற்றபடி அவ்வளவாக வெளியில் தெரியவில்லை. சாந்தினி இன்னமும் மோசம். ஒரு டிவி டாஸ்க்கில் சென்னை ஸ்லாங்கில் பேசி நடித்தது மட்டும்தான் நினைவில் இருக்கிறது. மற்றபடி அவரின் இருப்பு தெரியவேயில்லை. அதை அவரே உணர்ந்தாரோ, என்னமோ ஜேசனுடன் நெருக்கமாகி அந்த நிழலில் இன்னமும் வாரத்தைக் கடத்தலாம் என்று யோசித்தார் போலிருக்கிறது.பிக் பாஸ் ஆட்டத்தில் அதிகம் செயல்படாதவர்களை ‘மிக்சர் சாப்பிடுபவர்கள், வேஸ்ட், யூஸ்லெஸ்’ என்றெல்லாம் கிண்டலடிக்கிறோம். ராகவ், சாந்தினி போன்றவர்கள் தங்களின் குணாதிசயத்தோடு இருக்கிறார்கள். ஆட்டத்தின் நெருக்கடிக்காக சற்று மாற்றிக் கொண்டாலும் அதிகமாக செய்ய முடியவில்லை. இதற்காக அவர்கள் திறமையற்றவர்கள் என்றாகி விடுவது. இந்த ஆட்டத்திற்கு அவர்கள் பொருந்தவில்லை. அவ்வளவுதான்.Bigg Boss 10 - 6th Week Highlightsசாந்தினியின் எவிக்ஷன் வெளியான போது ஜேசனின் முகத்திற்கு காமிரா க்ளோஸ் வைத்தது எதிர்பார்த்ததுதான். இருவருக்கும் இடையில் இருப்பது நட்பா அல்லது அதற்கும் மேலா என்கிற குறுகுறுப்பான கேள்வி பெரும்பாலோரிடம் இருந்திருக்கும். விடைபெறும் சமயத்தில், ‘She is my brother. சாந்த