Doctor Vikatan: மழைக்காலம் வந்தாலே வயிறு பிரச்னை பண்ணுதா... உணவு விஷயத்துல தப்பு பண்ணாதீங்க!
Doctor Vikatan: மழைக்காலம் வந்தாலே,வயிறு தொடர்பான பிரச்னைகள் வருகின்றன. அஜீரணம், வயிற்றுப்போக்கு, பசியின்மை... இப்படி ஏதேனும் ஒன்று மாற்றி மாற்றிப் படுத்துகிறது. மழைக்காலத்துக்கும் செரிமான பிரச்னைக்கும் என்ன தொடர்பு... உணவுப்பழக்கத்தில் எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்?பதில் சொல்கிறார், செ

Doctor Vikatan: மழைக்காலம் வந்தாலே,வயிறு தொடர்பான பிரச்னைகள் வருகின்றன. அஜீரணம், வயிற்றுப்போக்கு, பசியின்மை... இப்படி ஏதேனும் ஒன்று மாற்றி மாற்றிப் படுத்துகிறது. மழைக்காலத்துக்கும் செரிமான பிரச்னைக்கும் என்ன தொடர்பு... உணவுப்பழக்கத்தில் எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவர் பாசுமணி.குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவர் பாசுமணிமழைக்காலம் என்றாலே சூடாக மசால் வடை, பஜ்ஜி போன்ற ஏதோ ஒன்றுடன் ஒரு கப் டீ அல்லது காபியை ருசிக்க வேண்டும் என்ற உணர்வு பலருக்கும் இருக்கும். அப்படி ரசித்துச் சாப்பிடலாம், தவறில்லை. ஆனால், சூடு, சுவை ஆகியவற்றுடன் நாம் கூடுதலாக கவனிக்க வேண்டியது சுத்தம் மற்றும் சுகாதாரம்.மழைக்காலத்தில் நமது உணவிலும் நீரிலும் ஏற்படும் கிருமிக்கலப்புதான் உணவு வழியே பரவும் பலவகையான தொற்றுகளுக்கு வழி திறக்கிறது. நோயைத் தடுக்கும் உணவு என்று பிரத்யேகமாக எதுவும் கிடையாது. போதுமான புரதம், அளவான மாவுப் பொருள்கள் (சாதம், சப்பாத்தி போன்றவை), தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்ந்த சமைத்த சரிவிகித உணவுதான் உடலுக்கு இயல்பான நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். எனவே, சாதாரண சரிவிகித சாப்பாட்டோடு சேர்த்து, எக்ஸ்ட்ராவாக வைட்டமின் சி இருக்கும்படியான கொய்யா, நெல்லிக்காய், ஆரஞ்சு போன்ற பழங்களைச் சேர்த்துக்கொண்டால், நமது நோய் எதிர்ப்பு சக்திக்கு கூடுதல் பலன் கிடைக்கும்.மழைக்காலத்தில் நமது உணவிலும் நீரிலும் ஏற்படும் கிருமிக்கலப்புதான் உணவு வழியே பரவும் பலவகையான தொற்றுகளுக்கு வழி திறக்கிறது. மன அழுத்தம் வந்தால் வயிறு கலங்குவதேன்? - வயிறு எனும் மர்மதேசம் - 21பழங்கள், காய்கறிகளை எல்லாம் சுத்தமான நீரில் கழுவி, அதன் பிறகே நறுக்கிச் சமைத்துச் சாப்பிட வேண்டும். கீரைகளை ஒன்றுக்கு இருமுறை நன்றாகக் கழுவ வேண்டும். குடிநீரைப் பொறுத்தவரை தண்ணீரைக் கொதிக்க வைத்து, ஆற வைத்துப் பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.உணவுகளைப் பொறுத்தவரை, அதன் பிராண்ட், தயாரித்த நிறுவனம், உணவின் சூடு, நிறம் மற்றும் தோற்றப் பொலிவு ஆகியவற்றை மட்டும் பார்த்துத் தேர்வு செய்யக்கூடாது. அது எப்படித் தயாரிக்கப்பட்டது, எப்படிப் பாதுகாக்கப்பட்டது மற்றும் நம்மை அடையும் வரை சுத்தமாக இருந்திருக்குமா போன்ற விஷயங்களையும் கவனித்தே வாங்க வேண்டும்.வேகவைக்காத முட்டை, காய்ச்சாத பால், ஆறவைத்துச் சரியாகக் குளிரூட்டப்படாமல் மீண்டும் சூடுபடுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றில் கவனம் தேவை. அதைவிட முக்கியமாக, உணவு சமைக்கும் மற்றும் தயாரிக்கும் இடங்களில் அதிகபட்ச சுகாதாரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். கழிவறையைப் பயன்படுத்திய பின்பு சுத்தமான நீரில் சோப்பு போட்டு கைகளை நன்றைக் கழுவிய பிறகே உணவைக் கையாள வேண்டும். சுகாதாரக் குறைபாடு உள்ள இடங்களில் சமைக்கப்படும் உணவுகளின் மூலமாகவோ அல்லது நீரின் மூலமாகவோதான் நமக்கு அதிகமான கிருமித் தொற்றுகள் ஏற்படுகின்றன. வீட்டிலும் சமைத்த உணவு, சமைக்காத உணவு, காய்கறி அல்லது இறைச்சி வெட்டும் பலகைகள் போன்ற ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பிரித்துச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.கழிவறையைப் பயன்படுத்திய பின்பு சுத்தமான நீரில் சோப்பு போட்டு கைகளை நன்றைக் கழுவிய பிறகே உணவைக் கையாள வேண்டும்.அதிகம் சாப்பிடுபவர்களா ஆண்கள்? - வயிறு எனும் மர்மதேசம் - 7 - உள்ளே, வெளியே...சமைத்த உணவை ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்குள் சிறு சிறு பாத்திரங்களில் நிரப்பி, குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். ஒருமுறை சாப்பிடுவதற்குத் தேவையான அளவை மட்டும் எடுத்துச் சூடுபடுத்திச் சாப்பிட வேண்டும். மாறாக, மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதும், ஆறவைத்து மறுபடியும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்துவதும் கூடாது. இப்படி சுகாதாரமான, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்து வந்தாலே, மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுநோய் அபாயத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.டாக்டர் பாசுமணி:சென்னை வடபழனி, காவேரி மருத்துவமனையில் செரிமானத்துறை தலைமை மருத்துவர்.உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.