முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக பெண் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!
சென்னை பாரிமுனைப் பகுதியில் கடந்த 7-ஆம் தேதி திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. இதில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள்

சென்னை பாரிமுனைப் பகுதியில் கடந்த 7-ஆம் தேதி திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. இதில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றிருக்கின்றனர். சுதா தீனதயாளன் - முதல்வர் விஜய் இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய திமுக மகளிரணி நிர்வாகியும், சென்னை மாநகராட்சியின் 95-வது வட்ட கவுன்சிலருமான சுதா தீனதயாளன், முதல்வர் விஜய் குறித்து தரக்குறைவான வகையில் பேசியிருக்கிறார். இதுதொடர்பான, வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மேயர் பிரியா, சேகர்பாபு உள்ளிட்டோர் சிரிப்பது போன்று இடம்பெற்றுள்ளது. “ஆணாதிக்க சிந்தனை... 'டோரதி' படத்தை ஏற்க முடியாமல் கடுமையாக விமர்சிக்கிறார்கள்” - திருமாஅதேவேளையில், சுதா தீனதயாளனின் அந்தப் பேச்சுக்கு மேடையிலேயே கனிமொழி மற்றும் சேகர்பாபு ஆகியோர் உடனடியாகக் கண்டனம் தெரிவித்து அவரைக் கண்டித்ததாக திமுக மகளிரணி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், இந்த விவகாரத்தில் கவுன்சிலரின் பேச்சைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.முதல்வர் விஜய்இதன் தொடர்ச்சியாக, தவெக நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின் பேரில், எஸ்பிளனேடு காவல் நிலைய (B-2) காவல்துறையினர் கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீது அவதூறாகப் பேசியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb