கேரளம்: கள்ளநோட்டு அச்சடிக்கும் மையம் கண்டுபிடிப்பு; அச்சடிக்க தயாராக இருந்த தாள்கள் பறிமுதல்
கேரள மாநிலம் கொல்லம் வாடி கல்லேலிவயல் புரயிடம் பகுதியைச் சேர்ந்தவர் சிபியோன். இவர் கடந்த 16-ம் தேதி திடீரென மாயமானதாகவும், அவரை ஒரு கும்பல் கடத்திச் சென்றுவிட்டதாகவும் கூறி போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், மறுநாளே சிபியோன் திடீரென வீடு திரும்பிவிட்டதாக போலீஸார

கேரள மாநிலம் கொல்லம் வாடி கல்லேலிவயல் புரயிடம் பகுதியைச் சேர்ந்தவர் சிபியோன். இவர் கடந்த 16-ம் தேதி திடீரென மாயமானதாகவும், அவரை ஒரு கும்பல் கடத்திச் சென்றுவிட்டதாகவும் கூறி போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், மறுநாளே சிபியோன் திடீரென வீடு திரும்பிவிட்டதாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். மேலும் தன்னைக் கடத்திச் சென்ற மர்மக் கும்பலின் பிடியிலிருந்து சாமர்த்தியமாகத் தப்பித்து வந்ததாகவும் அவர் நாடகமாடினார். இதையடுத்து அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் சிபியோன் மாயமான சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறி சந்தேகத்தின் பேரில் சில நபர்களை போலீஸார் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். எனினும், சிபியோனின் நடவடிக்கைகளிலும், அவர் கூறிய முன்னுக்குப் பின் முரணான பதில்களிலும் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவரை ரகசியக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அதே சமயம் சிபியோன் கள்ள நோட்டு அச்சடிக்கும் கும்பலைச் சேர்ந்தவர் எனக் கொச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் ஹேமலதாவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சிறப்புப் பிரிவின் அறிக்கை மற்றும் போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் பிரிவினரைத் தீவிரமாகக் கண்காணிக்கு உத்தரவிட்டார். மேலும், கொல்லம் சிட்டி போலீஸ் கமிஷனர் ஹேமலதா உத்தரவின்பேரில் பியோனின் வீட்டில் போலீஸார் இன்று திடீரென சோதனை நடத்தினர். இந்த அதிரடி சோதனையில், அங்கு அதிநவீன இயந்திரங்களுடன் கள்ளநோட்டு தயாரிக்கும் பட்டறை இயங்கி வந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர்.500 ரூபாய் கள்ள நோட்டு கட்டுகள்அங்கிருந்து கள்ளநோட்டு அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உயர்ரக பிரிண்டர்கள், பணம் எண்ணும் நவீன இயந்திரங்கள், அச்சடிக்க தயார் நிலையில் இருந்த 500 ரூபாய் அளவிலான 520 கட்டுத் தாள்கள், ரூ.5 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் விலை உயர்ந்த தங்க வாட்ச் உள்பட 46 சவரன் தங்க நகைகளை போலீஸார் மொத்தமாகப் பறிமுதல் செய்தனர். கேரளம்: 200 ஆண்டுகளுக்கும் மேலான இசைப் பயணம்... `பெருவெம்பா’ எனும் இசைக் கிராமம்! | Photo Albumபறிமுதல் செய்யப்பட்ட 520 கட்டு 500 ரூபாய் கள்ள நோட்டுகளும் முழுமையாக அச்சிடப்பட்டு புழக்கத்திற்கு வந்திருந்தால், அவற்றின் மதிப்பு சுமார் இரண்டரை கோடி ரூபாயைத் தாண்டியிருக்கும் எனப் போலீஸார் தெரிவித்தனர்.சிபியோனிடம் விசாரணை நடத்தும் போலீஸார்இதனைத் தொடர்ந்து சிபியோனை போலீஸார் கைதுசெய்தனர். கடத்தல் என்ற பெயரில் அவர் நடத்தியது கள்ளநோட்டு மோசடியை மறைப்பதற்காக அரங்கேற்றப்பட்ட திட்டமிட்ட நாடகமா என்ற கோணத்திலும், அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5 லட்சம் ரூபாய் ரொக்கம் அசல் பணமா அல்லது கள்ளநோட்டா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மிகவும் பரபரப்பான மற்றும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த வாடி கடற்கரைப் பகுதியிலேயே இந்தச் சட்டவிரோத கள்ளநோட்டு அச்சடிக்கும் மையம் நடத்தப்பட்டு வந்துள்ளதால், இதன் பின்னணியில் சர்வதேச அளவிலான பெரிய மாஃபியா கும்பல் அல்லது செல்வாக்குமிக்க உயர் மட்ட புள்ளிகளுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கேரளம்: பேக்கரியில் ஹார்ட்டி ஒயின் விற்பனை சர்ச்சை; கிளம்பிய எதிர்ப்பு... மாற்றப்பட்ட கலால் அதிகாரி!