மும்பை: முற்றிய கணவன் மனைவி சண்டை; 9 மாத குழந்தை நடைமேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசிப்பட்ட கொடூரம்
மும்பை காட்கோபர் சர்வோதயா நகரில் வசித்து வந்தவர் ஆர்த்தி. விட்டில் கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு தனது 9 மாத ஆண் குழந்தையை எடுத்துக்கொண்டு காட்கோபர் ரயில் நிலையத்திற்கு வந்தார். அவர் பயணிகள் நடந்து செல்வதற்காகக் கட்டப்பட்டுள்ள நடைமேம்பாலத்தில் தனது 9 மாத மகனுடன் நின்று கொண்டிருந்தார். அங்கு ஆர்த்தியி

மும்பை காட்கோபர் சர்வோதயா நகரில் வசித்து வந்தவர் ஆர்த்தி. விட்டில் கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு தனது 9 மாத ஆண் குழந்தையை எடுத்துக்கொண்டு காட்கோபர் ரயில் நிலையத்திற்கு வந்தார். அவர் பயணிகள் நடந்து செல்வதற்காகக் கட்டப்பட்டுள்ள நடைமேம்பாலத்தில் தனது 9 மாத மகனுடன் நின்று கொண்டிருந்தார். அங்கு ஆர்த்தியின் கணவர் ஜாபர் ஷேக்(23) வந்தார். அதனைத் தொடர்ந்து தம்பதியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதத்தின் போது, ஜாபர் குழந்தையை மனைவியிடமிருந்து பிடுங்க முயன்றார். இதற்கு ஆர்த்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து குழந்தையைக் கொடுக்க மறுத்தார். இதனால் ஜாபர் குழந்தையை ஆர்த்தியிடம் இருந்து பிடுங்கி கோபத்தில் நடைமேம்பாலத்தில் இருந்து கீழே வீசியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் குழந்தைக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆர்த்தி தனது காயமடைந்த மகனை உடனடியாக மருத்துவச் சிகிச்சைக்காக ராஜாவாடி மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார். அங்கு குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததால், மருத்துவர்கள் குழந்தையை மேல் சிகிச்சைக்காக சயான் மாநகராட்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஒன்பது மாதக் குழந்தையான அவன், தற்போது அந்த மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான். ஜாபர் துணிகளை விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்த்தியைத் திருமணம் செய்துகொண்டார். மேலும், ஜாபருக்கு போதைப்பொருள் பழக்கம் இருந்ததாகவும், இதனால் தம்பதியினரிடையே அடிக்கடி வாக்குவாதங்களும் மோதல்களும் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜாபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் இரவு 10 மணிக்கு நடந்ததால் ரயில்வே நடைபாலத்தில் அதிக அளவில் பயணிகள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.கொலை மோசடி வழக்கிலிருந்து தப்பிக்க நூதன யோசனை; AI பயன்படுத்தி தனக்கு தானே இறுதிச்சடங்கு நடத்திய நபர்