"யாரு...?" - மூர்த்தி...தன்ராஜ்... மற்றும் பலர்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்யார், யாரது, யாரு... எல்லாமே ஒன்றுதான். பெரும்பாலும் 'யாரு' என்பதுதான் ப

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்யார், யாரது, யாரு... எல்லாமே ஒன்றுதான். பெரும்பாலும் 'யாரு' என்பதுதான் பேச்சுத்தமிழில் இடம்பெறும். அந்த 'யாரு' சில சமயம் ஒரு பேருக்கு முன்னால் வந்தால் சம்பந்தப்பட்ட பெயர் அந்த நேரத்தில் திடீர் பிரபலம் ஆகி இருக்கும். 90-களில் ஆரம்பித்து இன்றுவரையில் நிலைத்திருப்பது 'யாரு தன்ராஜா...?' என்ற 'சூரியன்' படத்தில் கவுண்டமணி பேசும் புகழ்பெற்ற நகைச்சுவை வசனம். அதைத் தொடர்ந்து வரும் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...' என்பது இன்றும் என்றும் அரசியலுக்கு 100 சதவீதம் பொருந்துகிறது. இந்த 'யாரு' பற்றிய சில தகவல்களைப் பார்ப்போம்.'திருவிளையாடல்' படத்தில் 'ஹேமநாத பாகவதர்' வேடத்தில் நடிக்கும் பாலையா அவர்கள் பாண்டிய நாட்டிற்கு வந்து மன்னனிடம் தன்னிடம் போட்டி போட்டு ஜெயிக்க யாராவது இருக்கிறார்களா என்று அகம்பாவத்தோடு கேட்க, மன்னனும் சரியென்று சொல்கிறான். அவரோடு போட்டியில் பங்கேற்க போவது யார் என்று எதுவும் தோன்றாமல் கடைசியில் 'பாணபத்திரர்' பெயர் முடிவு செய்யப்படுகிறது.அவர் கோவிலில் பஜனை பாடல்கள் பாடுபவர். என்ன செய்வது என்று தெரியாத பாணபத்திரர் இறைவனிடம் சென்று "இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை... நீ இருக்கையிலே எனக்கு பெரும் சோதனை" என்று உருக்கமாக பாடி முறையிடுகிறார். அவருக்காக மனம் இரங்கிய இறைவன் விறகு வெட்டியாக வந்து அந்த பாகவதர் தங்கி இருக்கும் விடுதிக்கு வெளியே வந்து படுக்கிறான். உள்ளே பாகவதர் "நாளை என்னோடு போட்டிபோட்டு பாடப் போவது யார்...?" என்று சிஷ்யர்களிடம் கேட்கிறார். எல்லாவற்றையும் கவனித்த இறைவன் கர்ண கொடூரமான குரலில் ஆரம்பித்து "பாட்டும் நானே பாவமும் நானே" என்று பாடி அந்த பாகவதரின் கொட்டத்தை அடக்குகிறான். அகம்பாவத்தை விட்டொழித்த அவர் "நீ யாரப்பா...?" என்று கேட்க, இறைவன் "நான் பாணபத்திரர் சிஷ்யன்" என்று சொல்கிறான். ஒரு விறகு வெட்டியின் பாட்டுக்கு நான் அடிமை என்று எழுதி கொடுத்து விட்டு அவர் சென்று விடுகிறார். பிறகு பாணபத்திரர் அவர்களை சந்தித்து நடந்ததை சொல்கிறார். அவருக்காக விறகு வெட்டியாக வந்தது யாரென்பதை இறைவன் உணர வைக்கிறான்."யாருக்கு மாப்பிள்ளை யாரோ... அவர் எங்கே பிறந்திருக்கிறாரோ...?" என்ற பாடல் 'பார்த்தால் பசி தீரும்' படத்தில் இடம்பெற்றது. ஒரு பெண்ணுக்கு ஏற்ற காதலன் அல்லது கணவன் எங்கே பிறந்திருப்பான், எப்போது வருவான், எப்போது அடுத்த நல்ல நிகழ்வு நடைபெறும் என்ற பல கேள்விகளை உள்ளடக்கிய ஒரு பாடல் இது. காதலில் சந்தோஷமான ஒரு ஆரம்பம் இதுதான். அதுவே வேறு மாதிரியானால் "யாருக்காக இது யாருக்காக... இந்த மாளிகை வசந்த மாளிகை" என்று சோகமான பாடல் வரும்.'யார்' என்ற அமானுஷ்ய படம் 80-களில் வெளிவந்து வெற்றியை பெற்றது. அந்த படத்திற்கு பிறகு சாதாரண கண்ணன் ஆக இருந்த இயக்குனர் 'யார் கண்ணன்' ஆக பெயரை மாற்றிக்கொண்டார். 'அதே கண்கள்' A.V.M. தயாரிப்பில் வெளிவந்த திகில் படம். தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட குடும்பத்து உறுப்பினர்கள் கொலை செய்யப்படுவார்கள். காரணம் என்ன, கொலையாளி யார் என்பதை கடைசிவரையில் யூகிக்க முடியாத அளவிற்கு இயக்குனர் திருலோகசந்தர் படமாக்கி இருந்தார். இந்த இரண்டிலும் பிரதானமாக 'யார்' இருந்தது.'யார்' கண்ணன்"நான் யார் நான் யார் நீ யார்... நாளும் தெரிந்தவர் யார் யார்...?" என்று 'குடியிருந்த கோயில்' படத்தில் மக்கள் திலகம் அவர்கள் பாடுவது போல் அமைந்த ஒரு தத்துவப் பாடல். பாடல் முழுவதும் 'யார்' வரும். அவ்வளவு அற்புதமாக புலவர் புலமைப்பித்தன் எழுதியிருப்பார். இப்பாடல் மூலம் தான் அவர் திரை உலகிற்கு அறிமுகமானார். "யாரோ இவர் யாரோ என்ன பேரோ அறியேனே..." என்பது அருணாச்சல கவிராயர் எழுதிய இராம நாடக கீர்த்தனையில் இடம்பெற்ற பாடல். ராமன் முதன் முதலில் மிதிலையில் சீதையை சந்திக்கும் போது பாடுவதாக அமைக்கப்பட்டுள்ளது. திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் இந்த பாடலை தனது கச்சேரிகளில் அடிக்கடி பாடியிருக்கிறார். இன்றும் பலர் பாடிக்கொண்டு இருக்கிறார்கள்.தற்போது பிரபலமாக இருப்பது 'யாரு மூர்த்தி...?'. 'ஜெயிலர் 2' படத்தில் மூர்த்தியாக நடித்து கலக்கி இருப்பவர் திரு. நமோ நாராயணன் அவர்கள். திரும்பும் பக்கமெல்லாம் 'மூர்த்தி அண்ணன் கேங்' இன்று இங்கே வந்துள்ளார்கள் என்ற விளம்பரம் தூள் கிளப்பிக் கொண்டே இருக்கிறது. படம் வெளியாகி இரண்டு நாட்களில் இது தொடங்கி விட்டது. சமூக ஊடகங்கள் முழுவதும் இதுதான் வைரலாக இருக்கிறது. 2009-ல் வெளிவந்த 'நாடோடிகள்' படத்தில் அறிமுகமானவருக்கு தற்போது தான் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.Jailer Reviewயார் அவர் என்று கேட்கும் அளவுக்கு ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நல்ல வழியில் முன்னேற வேண்டும். 'யாரு மூர்த்தி' என்ற அவர் கேரக்டர் காமெடியாக இருந்தாலும், ஒரு சூப்பர் ஸ்டார் படத்தில் அவரைத் தாண்டி ஒருவருக்கு வரவேற்பு கிடைப்பது மிகப்பெரிய விஷயம். அதைத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். 'யாரு மூர்த்தி' என்ற வார்த்தைக்குள் எவ்வளவு 'யார்... யாரு...' ஒளிந்து இருக்கிறது! ஒவ்வொரு நேரத்திலும் ட்ரெண்டிங்காக சில வார்த்தைகள் வரும். அதை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் புதிதாக நிறைய கற்றுக்கொள்ளலாம். அப்போது நாம் யார் என்பது நமக்கே புரியும். அந்த 'யார்' சமூகத்தில் இன்னொரு புதிய அடையாளத்தை நமக்கு கொடுக்கும். "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" என்ற வள்ளுவர் வாக்கு எல்லா இடத்திலேயும் பொருத்தமாக இருக்கும்.