NZ v IND: `அவர்களால் எப்படி இது முடிந்தது? எனக்குப் புரியல.!" - பாராட்டிய ஷ்ரேயாஸ்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ், அபிஷேக் ஷர்மா - வைபவ் ஆட்டத்தை வெகுவாக பாராட்டினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய பிறகு பேசிய கேப்டன் ஷ்ரேயாஸ், `இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் அணுகுமுறையும், கடினமான சூழலில் அவர்கள் வெளிப்படுத்த

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ், அபிஷேக் ஷர்மா - வைபவ் ஆட்டத்தை வெகுவாக பாராட்டினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய பிறகு பேசிய கேப்டன் ஷ்ரேயாஸ், `இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் அணுகுமுறையும், கடினமான சூழலில் அவர்கள் வெளிப்படுத்திய திறமையும் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாகக் குறிப்பிட்டார்.க்ஷ்ரேயாஸ் பேசுகையில், "அபிஷேக் ஷர்மா - வைபவ் பேட்டிங் கண்களுக்கு விருந்தாக இருந்தது. பந்து 'சீம்' ஆகிக்கொண்டிருந்த ஒரு ஆடுகளத்தில், அவர்களால் எப்படி இவ்வளவு எளிதாக ஷாட்களை ஆட முடிந்தது என்பது எனக்குப் புரியவில்லை. நானும் சஞ்சுவும் பேட்டிங் செய்ய வந்தபோது பந்தின் நகர்வை உணர்ந்தோம். ஆனால், அந்தச் சூழலில் அவர்கள் ஆடிய விதம் பிரமிக்க வைத்தது," என்று குறிப்பிட்டார். குறிப்பாக, அவர்களின் அதிரடி ஆட்டம் குறித்து அவர் மேலும் கூறுகையில், "உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், சர்வதேச கிரிக்கெட்டில் 5 ஓவர்களில் 100 ரன்கள் குவிக்கப்பட்டதை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லை. நான் பார்த்த சிறந்த ஆட்டங்களின் பட்டியலில் இது நிச்சயமாக முதலிடம் பிடிக்கும். இது ஒரு விதிவிலக்கான செயல்பாடு," என்று ஆட்டத்தை வெகுவாகப் பாராட்டினார். போட்டியின்போது இந்திய அணியின் பந்துவீச்சுத் திட்டம் மாறியது குறித்தும் ஷ்ரேயாஸ் விளக்கினார். "சுமார் 10 ஓவர்களுக்குப் பிறகு, நாங்கள் வீசிய 'ஹார்ட் லென்த்' மற்றும் 'ஹாஃப் வாலி' பந்துகள் கூட சிக்ஸர்களுக்குப் பறந்தன. அப்போது, பந்துவீச்சாளர்களிடம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு யார்க்கர்களை (yorkers) வீசுமாறு கூறினேன். பேட்ஸ்மேன்களைத் தரையோடு தரையாக அடிக்க வைப்பதே எங்கள் திட்டமாக இருந்தது. அந்த உத்தி ஓரளவுக்கு ரன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவியது. அவர்களை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்துவதே எங்கள் இலக்காக இருந்தது," என்றார்.இறுதியாக, "'ஜெட் லேக்' போன்ற பிரச்சனைகளுக்கு மத்தியிலும், புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு அவர்கள் வெளிப்படுத்திய ஆட்டம் நம்பமுடியாதது. அவர்களின் இந்த அபாரமான ஆட்டத்திற்கு முழுப் பாராட்டுகளையும் தெரிவித்தாக வேண்டும். நாங்கள் தொடரை வென்றுவிட்டோம். மீதமுள்ள போட்டிகளிலும் அவர்கள் இதேபோன்ற ஆட்டத்தைத் தொடர வேண்டும் என விரும்புகிறேன்," என்று ஷ்ரேயாஸ் கூறினார்.