”125 நாள் வேலைக்கான சம்பளம் 80 நாட்களாக வரவில்லை” - தீபாவளிக்கு முன்பு வழங்க விவசாயிகள் போராட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், ஆதனுார் கிராமத்தில், தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கரும்புக்கான ஊக்கத்தொகையை தீபாவளி பண்டிக்கைக்கு முன்பு வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. விவசாயி மகாலிங்கம் தலைமையிலும், சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் தலைமையில், உழவர்களை வாழ விடு

தஞ்சாவூர் மாவட்டம், ஆதனுார் கிராமத்தில், தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கரும்புக்கான ஊக்கத்தொகையை தீபாவளி பண்டிக்கைக்கு முன்பு வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. விவசாயி மகாலிங்கம் தலைமையிலும், சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் தலைமையில், உழவர்களை வாழ விடு என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.விவசாயிகள் போராட்டம்இதில், பாரபட்சம் காட்டாமல் பதிவு செய்யாத கரும்பு விவசாயிகளுக்கும் ஊக்கத்தொகையினை தமிழக அரசு வழங்க வேண்டும், தீபாவளிக்கு முன்பாக வழங்க வேண்டும், 100 நாள் வேலைக்கான கூலியைத் தாமதிக்காமல் வழங்க வேண்டும் எனக் கோஷமிட்டனர். பின்னர் விமல்நாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ''தமிழக அரசு கரும்புக்கான ஊக்கதொகை டன் ஒன்றுக்கு ரூ.709.50 அறிவித்துள்ளது. இந்தத் தொகையானது, பதிவு செய்த கரும்பு விவசாயிகளுக்கு மட்டுமே தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரைக்கப்பட்ட சுமார் 89 லட்சம் டன் கரும்பில், சுமார் 10.20 லட்சம் டன் கரும்பு, பதிவு செய்யாத விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டு அரைக்கப்பட்டுள்ளது. இதில் பாரபட்சம் காட்டாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும். இந்தத் தொகையை தீபாவளிக்கு முன்பு வழங்க வேண்டும். இதே போல் தவெக தேர்தல் வாக்குறுதியில் கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,500 தருவதாக அறிவித்தார்கள். ஆனால் தற்போது 4,000 மட்டும் தருகின்றனர். தேர்தல் சமயத்தில் சொன்னபடி பாராபட்சம் காட்டாமல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். சுவாமிமலை விமல்நாதன்இடைத்தரகர்கள், விவசாய சங்கங்களின் தலையீடுகள் இல்லாமல், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கரும்புக்கான ஊக்கத்தொகையை நேரடியாக வரவு வைக்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டம் 125 நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 80 நாட்களாக வேலை செய்ததற்கான சம்பளம் வழங்கப்படவில்லை. தாமதிக்காமல் அந்தச் சம்பளத்தையும் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேசியக்கொடி, விவசாய கருவிகள் மற்றும் கரும்பு ஆகியவற்றுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்'' என்றார்.“பாசிசத்தில் பா.ஜ.க-வையே தவெக மிஞ்சுகிறது!” - முனைவர் கலையரசன் கைதுக்கு மு.க.ஸ்டாலின் காட்டம்!