ரூ.3 லட்சம் கடனால் நெருக்கடி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தூக்கிட்டு உயிரை மாய்த்த சோகம்!
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்ஙனாச்சேரி எஸ்.பி. கல்லூரி அருகே கரிங்கடயில் பகுதியில் வசித்து வந்தவர் ஸாஜூ (64). இவரது மனைவி அனு (59). இவர்களுக்கு சவின் (33) என்ற மகன் இருந்தார். வழக்கமாக காலையில் வெளியே வரும் ஸாஜூ மற்றும் அனு ஆகியோரை நீண்ட நேரமாகக் காணாததால் பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கு

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்ஙனாச்சேரி எஸ்.பி. கல்லூரி அருகே கரிங்கடயில் பகுதியில் வசித்து வந்தவர் ஸாஜூ (64). இவரது மனைவி அனு (59). இவர்களுக்கு சவின் (33) என்ற மகன் இருந்தார். வழக்கமாக காலையில் வெளியே வரும் ஸாஜூ மற்றும் அனு ஆகியோரை நீண்ட நேரமாகக் காணாததால் பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து ஸாஜூவின் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளனர். கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால் திறக்கப்படவில்லை. இதையடுத்து உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது ஸாஜூ, அவரது மனைவி, மகன் ஆகிய மூவரும் தூக்கில் சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஸாஜூ மற்றும் அனு ஆகிய இருவரும் படுக்கையறையிலும், மகன் சவின் வீட்டின் ஸ்டோர் ரூமிலும் தூக்கிட்ட நிலையில் சடலமாகத் தொங்கினர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மூன்று உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் ஸாஜூ மற்றும் அனு இணைந்து எழுதிய தற்கொலைக் கடிதம் ஒன்று சிக்கியது. அதில் பலரிடம் இருந்தும் கடன்பெற்ற சுமார் 3 லட்சம் ரூபாய் திருப்பிக் கொடுக்க வேண்டியுள்ளதாகவும், அந்தக் கடனை அடைத்துவிடுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்கொலைஸாஜூ நீண்ட காலமாகக் கோன்னியில் மளிகைப் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வந்தார். அண்மையில் அந்த வியாபாரத்தை நிறுத்தியதில் அவருக்குக் கடுமையான கடன் சுமை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது மனைவி அனு வீட்டின் மாடியில் தங்கும் விடுதி ஒன்றை நடத்தி வந்தார். மகன் சவினுக்கு ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் மூலம் நிதி இழப்பு மற்றும் கடன் நெருக்கடி இருந்ததாகக் கூறப்படுகிறது. சவினின் மனைவி வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். முதற்கட்ட விசாரணையில், பெற்றோர் முதலில் தற்கொலை செய்திருக்கலாம் என்றும், அவர்கள் இறந்ததைக் கண்டு மனமுடைந்த மகன் சவினும் பின்னர் அதே முடிவை எடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.ஒரரே குடும்பத்தில் தற்கொலைசெய்துகொண்ட மூவர்உயிரிழந்தவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் செல்போன்களைக் கைப்பற்றித் தீவிர விசாரணை நடத்தி வருவதாக டி.எஸ்.பி. எஸ்.அஷாத் தெரிவித்தார். மூவரின் உடல்களும் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், செத்திப்புழா செயின்ட் தாமஸ் மருத்துவமனைப் பிணவறைக்கு மாற்றப்பட்டன. உடற்கூறு ஆய்வு முடிவுகள் மற்றும் இறுதிச் சடங்குகள் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.