ஜெம் வீரமணி வழக்கு: எத்தனை பேர் கைது? அடையாள அணிவகுப்பு, LoC நோட்டீஸ் - காவல்துறையின் முழு விளக்கம்
சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்குகளில் ஜெம் வீரமணி உள்ளிட்டவர்கள் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. யார் யார் கைது? "சென்னை பெருநகர காவல்துறையின் விபச்சாரத் தடுப்புப் பிரிவில், சிறுமிகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட வழக்குகளில்

சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்குகளில் ஜெம் வீரமணி உள்ளிட்டவர்கள் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. யார் யார் கைது? "சென்னை பெருநகர காவல்துறையின் விபச்சாரத் தடுப்புப் பிரிவில், சிறுமிகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட வழக்குகளில் தொடர்புடைய எதிரிகள்1) வீரமணி, 2) சாந்தி, 3) மகேந்திர சிம்ஹன், 4) லாசர், 5) கணேசன், 6) பாபு, 7) பார்த்திபன் மற்றும் 8) சக்திவேல் ஆகிய 8 நபர்கள் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.அறிக்கைமுரசுப் புயல்: "மின் அமைப்புகளைச் சீரமைக்க உதவி செய்யுங்கள்" - விஜய்யிடம் பேசிய சந்திரபாபு நாயுடுசம்பிரதாயக் கைது சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்து அதன் பேரில் பதிவு செய்திருந்த எட்டு வழக்குகளில், மூன்று வழக்குகளில் வீரமணியும் மேலும் ஒரு வழக்கில் சாந்தி, மகேந்திர சிம்ஹன் மற்றும் லாசர் ஆகியோர் 28.10.2026-ம் தேதி அன்று சம்பிரதாயக் கைது (Formal Arrest) செய்யப்பட்டு சென்னை, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.அடையாள அணிவகுப்பு ஏற்கெனவே, ஜெம் வீரமணி மீது எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், குற்ற வழக்கு எண்-11/2026-ல் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் எதிரியை அடையாளம் காட்ட அடையாள அணிவகுப்பு புழல் மத்திய சிறையில் நடைபெற்றது.மேலும், இந்த வழக்குகள் தொடர்பாக எதிரி கணேசன் என்பவருடைய சென்னை, கொளத்தூரில் உள்ள வீடு மற்றும் நீலாங்கரையில் நடத்தி வந்த எதிரி சாந்தியின் நாட்டியப் பள்ளியிலும் சோதனைகள் நடத்தப்பட்டு வழக்கு தொடர்பான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.கைதுஆந்திரா: பள்ளிக்குள் புகுந்து மாணவிகள் மீது தாக்குதல்: துப்பாக்கிச் சூடு நடத்திப் பிடித்த போலீஸ்!லுக் அவுட் நோட்டீஸ் வீரமணி மீதான வழக்குகளில் தொடர்புடைய எதிரிகள் அயல்நாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க Look Out Circular (LOC) Notice வழங்கப்பட்டுள்ளது. வீரமணி தனது குற்றங்களை மறைக்க முயற்சித்தபோது அவருக்கு உதவிய பிரகாஷ் என்பவர் வெளிநாட்டிற்குத் தப்பி ஓடியுள்ளதால் அவருடைய Passport-ஐ முடக்கி அவரை வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் விரைவில் புலன் விசாரணை முடித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது". எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.