இலங்கைக்குக் கடத்த இருந்த 198 கிலோ கஞ்சா பிசின் பறிமுதல்; சிக்கிய நபரிடம் போலீஸார் தீவிர விசாரணை
பாசிப்பட்டினம் பாசியம்மன் கோவில் கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாகப் போதைப்பொருள் கடத்தப்படுவதாக எஸ்.பி.பட்டினம் காவல் ஆய்வாளர் டேவிட் ரவிராஜனுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிட

பாசிப்பட்டினம் பாசியம்மன் கோவில் கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாகப் போதைப்பொருள் கடத்தப்படுவதாக எஸ்.பி.பட்டினம் காவல் ஆய்வாளர் டேவிட் ரவிராஜனுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த நபரைப் பிடித்து சோதனை செய்தபோது, அவரிடமிருந்து 2 கிலோ கிராம் ஹஷீஷ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.கைது செய்யப்பட்ட மனோதொடர்ந்து அந்த நபரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் கஞ்சா செடியில் இருந்து பெறப்படும் பிசின் எனப்படும் இந்தப் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் மேலும் 17.8 கிலோ கிராம் ஹஷீஷ் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சோதனையில் மொத்தமாக 19.8 கிலோ போதைப் பொருள் சிக்கியது.எஸ்.பி சந்தீஷ் விசாரணைஇதனைத் தொடர்ந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட , திருவாடானை வட்டம், தளிர் மருங்கூர் பகுதியைச் சேர்ந்த அந்தோணி சேவியர் என்பவரின் மகன் மனோ என்பவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மனோ மீது ஏற்கனவே தொண்டி மற்றும் எஸ்.பி.பட்டினம் காவல் நிலையங்களில் போதைப்பொருள் வழக்குகள் நிலுவையில் உள்ளன:போதைப்பொருளைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், பதுக்கலில் ஈடுபட்ட மனோவைக் கைது செய்த எஸ்.பி.பட்டினம் போலீஸார். அவர் மீது போதைப்பொருள் கடத்தல் வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.``திருமணம் மீறிய உறவு, கஞ்சா போதை, உடந்தையான தாய்?” - மூன்று வயது குழந்தையை குதறிய சைக்கோ!